Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிதி ஆயோக்கின் புதிய தலைவராக தமிழ்நாட்டு "ஐயர்".. மத்திய அரசு அறிவிப்பு!!

Sekar June 24, 2022 & 17:03 [IST]
நிதி ஆயோக்கின் புதிய தலைவராக தமிழ்நாட்டு Representative Image.

நிதி ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பரமேஸ்வரன் ஐயரை நியமிப்பதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இன்று அறிவித்துள்ளது. பரமேஸ்வரன் ஐயர் அடுத்த இரண்டு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 30, 2022 அன்று பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்க்குப் பிறகு பரமேஸ்வரன் ஐயர் பதவியேற்பார்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட விமானப்படை அதிகாரிக்கு மகனாக ஸ்ரீநகரில் பிறந்த பரமேஸ்வரன் ஐயர், 1981 பேட்ச் உத்தரபிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 2009 இல் ஐ.ஏ.எஸ்ஸில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, ஐயர் உலக வங்கியில் தண்ணீர் மற்றும் சுகாதார நிபுணராக பணியாற்றினார். ஜூலை 2020 வரை மத்திய அரசில் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் செயலாளராகப் பணியாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது முதன்மையான ஸ்வச் பாரத் மிஷனை வழிநடத்த பரமேஸ்வரன் ஐயரைத் தான் தேர்ந்தெடுத்தார். பரமேஸ்வரன் தலைமையில் நாடு முழுவதும் 11 கோடிக்கு மேல் கழிவறைகள் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்