Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதமென பிரிந்தது போதும்.. 110 ஆண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக கிராமம்!!

Sekar August 04, 2022 & 12:34 [IST]
மதமென பிரிந்தது போதும்.. 110 ஆண்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக கிராமம்!!Representative Image.

பெரம்பலூரில் இந்து-முஸ்லீம் மோதலால் 110 ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்த செல்லியம்மன் கோவில் திருவிழா உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அரசு நிர்வாகம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைதியான முறையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர் எனும் கிராமம். இங்கு கடந்த 1912 ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவின்போது, அம்மன் திருவீதி உலாவில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு திருவிழா நின்று போனது.

பின்னர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடக்காத நிலையில், வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவர் செல்லியம்மன் திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக அதே வி.களத்தூரைச் சேர்ந்த சுன்னத் வால் ஜமாத் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கி ஊர்வலங்களையும் நடத்திக் கொள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தது. எனினும் இதை எதிர்த்து சுன்னத் வால் ஜமாத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கியது. மேலும், கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளதால், அனைத்து சாலை மற்றும் தெருக்களில் பிற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தால் கோவில் ஊர்வலங்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முன்முயற்சி எடுத்து, இந்து-முஸ்லீம் என இருதரப்பையும் அழைத்து பேசி சுமூக தீர்வை எட்டினார். அதன்படி கடந்த மே 16 ஆம் தேதி வி.களத்தூரில் நடந்த சந்தனக் கூடு திருவிழாவிற்கு ஜமாத் சார்பில் இந்துக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்துக்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்து கோவில் திருவிழா கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெற்றது. இதில் பங்கேற்க முஸ்லீம் ஜமாத்தார்களுக்கு இந்துக்கள் அழைப்பு விடுத்து அவர்களும் பங்கேற்றனர். விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதன் மூலம் 110 ஆண்டு கால மோதல் முடிவுக்கு கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் ஊர் மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்