Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol Diesel Price in Chennai Today : தொடர்ந்து 15 நாளாக.. வாகன ஓட்டிகளுக்கு Good News!!

Sekar June 05, 2022 & 08:28 [IST]
Petrol Diesel Price in Chennai Today : தொடர்ந்து 15 நாளாக.. வாகன ஓட்டிகளுக்கு Good News!!Representative Image.

Petrol Diesel Price in Chennai Today : எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்து வரும் நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. கொரோனா தொடங்கியதற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்தன.

தமிழகத்தில், கடந்த 2021 நவம்பர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தமிழகத்தில் தற்போதுவரை உச்சபட்ச விலையாக உள்ளது.

எனினும் அப்போது மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்ததன் மூலம் இவற்றின் விலை கணிசமாக குறைந்தது. பின்னர் சுமார் மூன்று மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. எனினும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்கள் தான் இதற்கு காரணம் என அப்போது கூறப்பட்டது. 

இதற்கிடையே தேர்தல்கள் முடிந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் மீண்டும் அவ்வப்போது விலையுயர்வு எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மே 21 ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படுவதாக திடீரென அறிவித்தார்.இதையடுத்து சென்னையில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த விலையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாததால் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் அதே விலையில் விற்பனையாகின்றது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை