Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுரையின் வெற்றி வேட்பாளர் மோடி.. அப்போ அது உண்மைதானா?

Sekar September 17, 2022 & 14:47 [IST]
மதுரையின் வெற்றி வேட்பாளர் மோடி.. அப்போ அது உண்மைதானா?Representative Image.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் இன்று கொண்டாடி வரும் நிலையில், மதுரையின் வெற்றி வேட்பாளர் நரேந்திர மோடி என மதுரை பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தானை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜகவினர் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பாஜக சார்பில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிறகும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகரில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியின் வெற்றி வேட்பாளர் பிரதமர் மோடி என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மோடியும் அமித் ஷாவும் 2024 தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டால் தான் பாஜக தமிழகத்தில் எழுச்சி பெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மதுரையில் பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில், மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் வரவேற்புஎப்படி இருக்கும் என ஆழம் பார்க்கும் பாஜகவின் முயற்சியாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்