Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவை உலகின் மையமாக மாற்ற.. மாநிங்களுக்கு அழைப்பு விடுத்த மோடி!!

Sekar September 10, 2022 & 16:01 [IST]
இந்தியாவை உலகின் மையமாக மாற்ற.. மாநிங்களுக்கு அழைப்பு விடுத்த மோடி!!Representative Image.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நவீன கொள்கைகளை உருவாக்க மாநில அரசுகளை வலியுறுத்தினார்.

மத்திய-மாநில அறிவியல் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொளி மூலம் உரையாற்றிய மோடி, 'ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்' என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னோக்கி செல்கிறது என்றார்.

இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற இதுவே சரியான நேரம் என்றும், இதற்காக பல்வேறு முனைகளில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நமது ஆராய்ச்சியை உள்ளூர் மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இதுவே தற்போதைய தேவை என்றும் கூறிய மோடி, அனைத்து மாநிலங்களும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு உள்ளூர் தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நவீன கொள்கைகளை உருவாக்க மாநில அரசுகளை வலியுறுத்திய அவர், விஞ்ஞானிகளுடன் அதிக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

"புதுமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகள் அதிகளவில் அறிவியல் நிறுவனங்களை உருவாக்கவும், செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் புத்தாக்க ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்." என மோடி மேலும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டுத் தரவரிசை 2015ல் 81 ஆவது இடத்தில் இருந்து தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்