Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மலேசிய இந்திய தலைவர் டத்தோ சாமிவேலு மரணம்.. பிரதமர், முதல்வர் இரங்கல்!!

Sekar September 15, 2022 & 17:11 [IST]
மலேசிய இந்திய தலைவர் டத்தோ சாமிவேலு மரணம்.. பிரதமர், முதல்வர் இரங்கல்!!Representative Image.

86 வயதில் காலமான மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற முன்னாள் கேபினட் அமைச்சரும், முதல்வருமான டத்தோ எஸ்.சாமிவேலு இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசியல்வாதி சாமிவேலு ஜூன் 1983 முதல் ஜூன் 1989 வரையிலும், மீண்டும் மே 1995 முதல் மார்ச் 2008 வரையிலும் அந்நாட்டின் பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஜூன் 1989 முதல் மே 1995 வரை எரிசக்தி, தொலைத்தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.

அவர் செப்டம்பர் 1979 முதல் ஜூன் 1983 வரை பணிகள் மற்றும் பொது வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றினார் மற்றும் செப்டம்பர் 1974 முதல் மார்ச் 2008 வரை சுங்கை சிபுட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

சாமிவேலு 1 ஜனவரி 2011 அன்று மந்திரி அந்தஸ்துடன், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான மலேசியாவின் உள்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.

மேலும் 1979 முதல் 31 ஆண்டுகள் மிக நீண்ட காலம் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்ததோடு, 29 ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்ததன் மூலம் நீண்ட காலம் அமைச்சராக பணியாற்றிய சிறப்பையும் கொண்டுள்ளார். சாமிவேலு ஹுசைன் ஓன், டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அப்துல்லா அகமது படாவி ஆகியோரின் கீழ் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், அவரது மறைவையொட்டி பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசியாவின் முதல் பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர் எஸ்.சாமிவேலுவின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்." எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்