Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிகவும் அரிதான முறையில்.. அபேவுக்கு அஞ்சலி.. மோடி, பிடென், ஆண்டனி கூட்டறிக்கை!!

Sekar July 09, 2022 & 11:12 [IST]
மிகவும் அரிதான முறையில்.. அபேவுக்கு அஞ்சலி.. மோடி, பிடென், ஆண்டனி கூட்டறிக்கை!!Representative Image.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கிற்காக அபே மேற்கொண்ட உழைப்பை போற்றும் விதமாக இந்த கூட்டு அஞ்சலி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக ஜப்பானின் முன்னாள் பிரதமர் 67 வயதான ஷின்சோ அபே, நேற்று காலை ஜப்பானின் தெற்கு நகரமான நாராவில் ஒரு பிரச்சார உரையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோடி, பிடென் மற்றும் அல்பானீஸ் ஷின்சோ அபே ஜப்பானில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர் என்றும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அயராது உழைத்ததாகவும் கூறினார். குவாட் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கியது.

"ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் சோகமான படுகொலையால் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களான நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்" என்று இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய நமது பணியை இரட்டிப்பாக்குவதன் மூலம் அபேயின் நினைவை போற்றுவோம் என்று மோடி, பிடென் மற்றும் அல்பானீஸ் தங்கள் கூட்டறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்