Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரச்சாரத்தை தொடங்கிய ரிஷி.. நம்மை ஆண்ட பிரிட்டனை நம்மில் ஒருவர் ஆள்வாரா?

Sekar July 09, 2022 & 09:19 [IST]
பிரச்சாரத்தை தொடங்கிய ரிஷி.. நம்மை ஆண்ட பிரிட்டனை நம்மில் ஒருவர் ஆள்வாரா?Representative Image.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியேறிய பிறகு, முன்னணி போட்டியாளர்களில் ஒருவரான ரிஷி சுனக் தான் பிரதமாராவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். 

முன்னதாக, இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவியில் இருந்து சுனக் ராஜினாமா செய்த நிலையில், போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் ஒருவர் பின் ஒருவராக பலரும் ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சனும் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதையடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். மேலும் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுவார். அதன் பிறகு கட்சியின் தலைவர் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பது தான் அங்குள்ள நடைமுறையாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு பலரின் பெயர்கள் அடிபட்டாலும், முன்னணியில் இருக்கும் சில பெயர்களில் ரிஷி சுனக்கின் பெயரும் அடங்கும். சுனக்கால் இதில் வெற்றிபெற முடிந்தால், இங்கிலாந்தின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனும் சிறப்பை பெறுவதோடு, இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமர் எனும் சிறப்பையும் பெறுவார்.

இவர் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது கொசுறு தகவல்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்