Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகின் பிரபலமான தலைவர்.. நெ.1 இடத்தில் தொடரும் மோடி!!

Sekar August 26, 2022 & 16:45 [IST]
உலகின் பிரபலமான தலைவர்.. நெ.1 இடத்தில் தொடரும் மோடி!!Representative Image.

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மார்னிங் கன்சல்ட் சமீபத்தில் நடத்திய ஆய்வில், நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருப்பதாகவும், உலகத் தலைவர்கள் தரவரிசையில் அதிக வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கண்டறிந்துள்ளது.

பிரபல தலைவர்கள் பட்டியலைப் பொறுத்தவரை எந்தத் தலைவரும் இந்தியப் பிரதமரை நெருங்க முடிவதில்லை. 75% ஒப்புதல் மதிப்பீடுகளுடன், அவர் இந்தியாவில் அதிக மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார்.

மோடிக்கு அடுத்த இடத்தில் உள்ள மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர், 12% வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அதே நேரம் உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் ஜோ பிடனுக்கு 41% ஆதரவும், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 39% மற்றும் பிரான்சின் மேக்ரானுக்கு 34% ஆதரவும் உள்ளன.

பல ஆண்டுகளாக, மிகவும் நம்பகமான ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்டின் தரவரிசையில் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்து வருகிறார். கொரோனா தொற்றுநோய், தற்போதைய ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் விலையில் வீழ்ச்சி விளைவு உட்படஉலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் மோடி பெரும்பாலானோரின் முதல் தேர்வாகத் தொடர்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்