Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகம் வரும் மோடி....இரண்டு நாட்களுக்கு பலூன்களை பறக்கவிட தடை...!

madhankumar July 27, 2022 & 19:48 [IST]
தமிழகம் வரும் மோடி....இரண்டு நாட்களுக்கு பலூன்களை பறக்கவிட தடை...!Representative Image.

நாளை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், நடைபெறும் சர்வதேச செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டி தொடக்க விழாவில் ககந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, போட்டியைத்‌ தொடக்கி வைக்கிறார்‌. மேலும் அன்று தமிழக ஆளுநர்‌ மாளிகையில்‌ தங்கும்‌ பிரதமர்‌ மோடி, மறு நாளான ஜூலை 29-ஆம்‌ தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்‌ பங்கேற்றுப்‌ பேசுகிறார்‌.

இதனை ஒட்டி பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புப் படையினர், நேரு உள் விளையாட்டரங்கம், அண்ணா பல்கலை கலக்கம், சென்னை விமான நிலையம், ஐஎன்எஸ் ,ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், பிரதமர் மோடி நாளை மறுதினம் மாலை 4.45 மணிக்கு சென்னையை வந்தடைகிறார். அவரின் வருகையை ஒட்டி சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்‌ பாதுகாப்பு கருதியும்‌, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும்‌ வகையிலும்‌, சென்னையில்‌ இரு நாள்கள் ‌ஜூலை 28,29 ஆம்‌ தேதிகளில்‌ டிரோன்கள்‌,சிறிய வகை ஆளில்லாத விமானங்கள்‌,பாரா சூட்டுகள்‌ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல காற்று பலூன்கள்‌, 'கியாஸ்‌' பலூன்கள்‌ பறக்க விடுவதற்கும்‌ குற்றவியல் நடைமுறைச்‌ சட்டம்‌ 144-இன்‌ கீழ்‌ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த 4 ஆம் தேதி  ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிற்கு சென்றிருந்த பிரதமர் மோடிக்கு, எதிர்ப்பு தெரிவித்து கருப்பு நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன, அது நேரடியாக மோடி சென்ற ஹெலிகாப்டரை நோக்கி சென்றதால் அது போன்ற அசம்பாவிதங்கள் ஆண்டாக கூடாது என இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்