Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிராம சுயராஜ்யத்தில் வரலாற்று சாதனை.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு மோடி கடிதம்!!

Sekar June 12, 2022 & 16:56 [IST]
கிராம சுயராஜ்யத்தில் வரலாற்று சாதனை.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு மோடி கடிதம்!!Representative Image.

கடந்த 8 ஆண்டுகளில் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்துகளின் ஜனநாயக அதிகாரம் ஆகியவற்றில் இந்தியா புதிய மைல்கற்களை எட்டியுள்ளது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நலத் திட்டங்கள், தண்ணீரைப் பாதுகாத்தல் மற்றும் வரவிருக்கும் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட பஞ்சாயத்து தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திள்ளார்.

தனது அரசாங்கத்தின் எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய சில நாட்களுக்குப் பிறகு, கிராமத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டியதோடு, அவர்களின் ஆதரவைக் கோரி பல விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார் மோடி.

யோகா தினம்

ஜூலை 21 ஆம் தேதி வரும் எட்டாவது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடவும், தங்கள் கிராமத்தில் உள்ள அனைவரையும் யோகா தின பயிற்சியில் சேர ஊக்குவிக்கவும் அவர் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அன்றைய தினம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் யோகா செய்ய அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பழமையான அல்லது சுற்றுலா தலத்தையோ அல்லது நீர்நிலைக்கு அருகிலுள்ள இடத்தையோ தேர்ந்தெடுக்கலாம், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் படங்களைப் பகிருமாறு அவர்களை வலியுறுத்தினார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நாளை உற்சாகமாக அனுசரிக்கிறார்கள், கடந்த ஆண்டுகளில் வானம் முதல் இமயமலை மற்றும் கடல் வரை பல்வேறு மூலைகளில் யோகா செய்யும் படங்கள் இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளன என்று பிரதமர் எழுதியுள்ளார்.

வரவிருக்கும் யோகா தினத்தின் கருப்பொருள் "மனிதகுலத்திற்கான யோகா" என்று குறிப்பிட்ட அவர், கொரோனா தொற்றுநோய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்றும் இதில் யோகா எவ்வளவு பெரிய பங்கை வகிக்க முடியும் என்றும் கூறினார்.

நீர் சேமிப்பு

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, மழை நீர் சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக கிராமங்களில் கூட்டு முயற்சிகளைத் தொடருமாறு கிராமத் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த இலக்கை அடைய, இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த சரோவர் நீர்நிலைகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது என மோடி கூறினார்.

சமூக நல திட்டங்கள்

தகுதியுடைய ஒவ்வொரு பயனாளிக்கும் உதவ சமூக நல நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருவதால், பஞ்சாயத்து தலைவர்களுக்கு இதில் பெரிய பங்கு இருக்கும் என்றும், யாரும் திட்டங்களின் பலன்களை பெறுவதில் இருந்து விடுபடாமல் இருக்க தங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

"கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தகுதியுள்ள நபரும் திட்டங்களின் முழுப் பலனைப் பெறும்போது, ​​கிராமமும், முழு நாடும் செழிக்கும்" என்று அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்வச் பாரத் (தூய்மையான இந்தியா)க்கான முயற்சிகளை அனைத்து தீவிரத்துடன் தொடர வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.

கிராம சுயராஜ்யம் மற்றும் கரீப் கல்யாண் (ஏழைகள் நலன்) ஆகியவற்றில் புதிய மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன என மோடி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் உள்ளன.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 69 சதவீத மக்கள் இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்) தொழிலாளர்களை பாராட்டியதையும் குறிப்பிட்ட பிரதமர், இது கிராமங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்றார்.

அந்தக் கடிதத்தில், விவசாயிகளுக்குப் பருவமழை நன்றாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்