Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடமை தவறிய காவல் அதிகாரி.. குட்டு வைத்த நீதிமன்றம்.. நடவடிக்கை பாயுமா?

Sekar August 25, 2022 & 11:57 [IST]
கடமை தவறிய காவல் அதிகாரி.. குட்டு வைத்த நீதிமன்றம்.. நடவடிக்கை பாயுமா?Representative Image.

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் கடமையை ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பி செய்யத் தவறியதன் அடிப்படையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், மக்கள் திரண்டிருப்பதை அறிந்திருந்தும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான தனது பொறுப்புகளை எஸ்எஸ்பி ஃபெரோஸ்பூர் செய்யத் தவறியதாக அறிக்கை கூறுகிறது என்றார். 

பிரதமர் அந்த வழியில் செல்வார் என்று இரண்டு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது, ஆனால் ஃபிரோஸ்பூர் எஸ்எஸ்பி தனது பணியை செய்யத் தவறிவிட்டார் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு, பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ள உச்சநீதிமன்றம், இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்