Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பட்டியலினத்தவருக்கு 22 சதவீத இட ஒதுக்கீடு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!!

Sekar October 08, 2022 & 17:05 [IST]
பட்டியலினத்தவருக்கு 22 சதவீத இட ஒதுக்கீடு.. பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!!Representative Image.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள் தொகைக்கு ஏற்ப வெவ்வேறு அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒட்டுமொத்தமாக நாடு தழுவிய அளவில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என மொத்தம் 49.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 சதவீதம் (இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடாக 3.5 சதவீதம் சேர்த்து), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம், பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவீதம் (அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் சேர்த்து), பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பட்டியலின மக்கள்தொகைக்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் என்று 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இட ஒதுக்கீட்டையும் 56% ஆக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும்.  தமிழ்நாட்டிலும்  அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை  எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்