Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீட் தருவதாக பணம் வாங்கி.. மோசடி செய்த பாஜக மதுவந்தி..? போலீசில் புகார்!!

Sekar June 24, 2022 & 12:32 [IST]
சீட் தருவதாக பணம் வாங்கி.. மோசடி செய்த பாஜக மதுவந்தி..? போலீசில் புகார்!!Representative Image.

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக பாஜகவைச் சேர்ந்த மதுவந்தி மீது கோவில் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பழம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் அங்குள்ள கோவில் ஒன்றில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பாஜகவைச் சேர்ந்த மதுவந்திக்கு எதிராக பண மோசடி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துக்குமார், "2019 முதல் கிருஷ்ணபிரசாத் நிர்வாகியாக இருந்துவரும் கோவிலுக்கு மதுவந்தி சென்று வருகிறார். அப்போது தான் பிஎஸ்பிபி பள்ளியின் நிர்வாகியாக இருப்பதாகவும், பள்ளியில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் ரூ.3 லட்சம் கொடுத்தால் சீட் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பி கோவிலுக்கு வரும் 8 பேரிடம் கிருஷ்ண பிரசாத் மொத்தமாக ரூ.19 லட்சத்தை பெற்று மதுவந்தியிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் சீட் கிடைத்த பாடில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

போலீஸ் புகாரால் பயந்த மதுவந்தி ரூ.13 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து மீத பணத்தை பின்னர் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் மீத பணத்தை திரும்ப தரவேயில்லை. பணம் கொடுத்த பெற்றோர்கள் பணம் கேட்டு கிருஷ்ண பிரசாத்தை நச்சரிக்கவே, அவரும் மதுவந்தியிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி தி.நகர் பூங்காவிற்கு கிருஷ்ணபிரசாத்தை வரவழைத்த மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் மதுவந்தி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது ஆதாரங்களை சமர்பித்து பணத்தை மீட்பதோடு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மதுவந்தி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "பிஎஸ்பிபி பள்ளி எங்களுடையது எனும்போது நான் ஏன் தனியாக பணம் வாங்க வேண்டும். கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. பணத்தை ஏமாற்றிவிட்டு என் மீது பொய் பழி சுமத்தியுள்ள கிருஷ்ணபிரசாத் மீது, உரிய ஆதாரங்களுடன் விரைவில் புகார் அளிக்க உள்ளேன்." என்று கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்