Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..

Nandhinipriya Ganeshan October 14, 2022 & 13:55 [IST]
ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image.

குறைந்த விலையில் அதிக புரதச் சத்து கொண்ட ஒரு உணவு என்றால் அது 'முட்டை' தான். இது சைவமா, அசைவமா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி, இன்னும் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது போகட்டும்! இந்த உலக முட்டை தினம் (World Egg Day) எதுக்கு கொண்டாடப்படுகிறது. வாங்க தெரிந்துக்கொள்ளலாம். 

குளிர்காலத்தில் தினமும் 2 வேக வைத்த முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image

உலக முட்டை தினம்

ஊட்டச்சத்து குறைபாடு உலகம் முழுவதும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எனவே, அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே, வருடம் தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முட்டையின் நன்மைகள் குறித்தும் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்துவதே இந்த நாளின் முக்கியமான நோக்கம்.

எக் டே ஸ்பெஷல்.. சூப்பரான முட்டை பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image

உலக முட்டை தின வரலாறு

உலக முட்டை தினம் முதன் முறையாக 1996 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. வியன்னாவில் நடந்த மாநாட்டில் சர்வதேச முட்டை ஆணையம், சர்வதேச முட்டை தினத்தை கொண்டாடுவதாக அறிவித்தது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகளில் மக்கள் இந்த நாளை மிகவும் ஆக்கப்பூர்வமாக கொண்டாடுகிறார்கள்.

முட்டையின் வெள்ளைக்கரு அல்லது மஞ்சள் கரு – எது சிறந்தது?

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image

சத்துக்கள்

இந்த முட்டையில் ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி உடலுக்கு தேவையான வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ ஆகியவற்றுடன் கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் நிறைந்துள்ளன. ஒரு முட்டையில் 80 கலோரி சத்து இருக்கிறது. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவிலும், 20 கலோரி வெள்ளைக் கருவிலும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், முட்டையில் DHAஎன்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது. எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம். 

எளிமையான முறையில் டேஸ்ட்டான கேரள ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி...?

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image

சுவாரஸ்ய தகவல்கள்

  • இயற்கையாகவே நமக்கு வைட்டமின் டி யை கொடுக்கும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று. 
  • ஒரு கோழி வருடத்துக்கு 300 ல் இருந்து 325 முட்டைகளை இடும். 
  • மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதில் தாய்ப்பாலுக்கு அடுத்த இடத்தில் இருப்பது முட்டை.
  • முட்டையை எப்போதும் பச்சையாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைப் பகுதியை மட்டும் ஒரு நாளுக்கு ஒன்று என எடுத்துக்கொள்ளலாம். 
  • சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை எக்காரணத்திற்காகவும் சாப்பிடவே கூடாது.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..

ஹேப்பி எக் டே ! முட்டை எடு.. கொண்டாடு..Representative Image

நாட்டுக்கோழி முட்டை or பிராய்லர் கோழி முட்டை

நாட்டு முட்டை மற்றும் பிராய்லர் முட்டைகளுக்கு இடையே உள்ள வெளிப்படையான வேறுபாடு என்றால் அது நிறம் தான். நாட்டு முட்டைகள் வெளிர் பழுப்பு நிறத்தில் காணப்படும். பிராய்லர் முட்டைகள் நல்ல வெளிர் நிறத்தில் இருக்கும். ஊட்டச்சத்து குறித்த விதத்தில் இரண்டு முறைகளுக்கும் இடையே 10 லிருந்து 15 சதவிகிதம் வித்தியாசமே தவிர, அதிக அளவில் இல்லை. 

ஆரோக்கியம் குறித்த விஷயத்தில் நாட்டுக்கோழி முட்டை தான் நல்லது. எனவே, விலை சற்று அதிகமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு முடிந்த அளவுக்கு நாட்டு முட்டைகளை கொடுங்கள். மேலும் முதியோர்களுக்கும் இது நல்லது.

கர்ப்பிணிகள் வேக வைத்த முட்டை சாப்பிடலாமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்