Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரெடியா இருங்க....கொரோனா அதிகரிப்பு....மும்பை மாநகராட்சி அறிவுறுத்தல்.!

madhankumar June 01, 2022 & 18:02 [IST]
ரெடியா இருங்க....கொரோனா அதிகரிப்பு....மும்பை மாநகராட்சி அறிவுறுத்தல்.!Representative Image.

மும்பையில் கொரோனா தொற்று நேர்மறை விகிதம் 6 சதவீதம் உயர்ந்துள்ளது, மும்பை நகரில் 506 புதிய கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கொரோன தொற்று மும்பை போன்ற நகரங்களில் உயர்ந்துவருகிறது, நாடுமுழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,745 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 2,338 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகமாக பதிவாகியுள்ளது, இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,636ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,236 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில், மொத்தம் 4,26,17,810 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 18,386 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக மும்பையில் கொரோனா தொற்றின் நேர்மறை விகித 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில் 506 புதிய கரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளன. இது இந்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் (536 எண்ணக்கை) அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மே மாதத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையில் மும்பையில் 100சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மும்பையில் கரோனா சோதனை வேகப்படுத்தப்படும் என்று குடிமை அமைப்பான மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்