Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தபால் வங்கி கணக்கு ரூ.10 ஆயிரம் சேமித்தால்....ரூ. 16 லட்சம் வருமானம்...?

madhankumar July 23, 2022 & 12:15 [IST]
தபால் வங்கி கணக்கு ரூ.10 ஆயிரம் சேமித்தால்....ரூ. 16 லட்சம் வருமானம்...?Representative Image.

அஞ்சல் அலுவலக சேமிப்பு மூலம் உங்கள் பணத்தை முதலீடு செய்வது சிறந்த வழியாகும், அதுவும் குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள தொடர் வைப்புத் (RD) திட்டம் நல்ல லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டமாகும். அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இரண்டையும் கொடுக்கிறது.

தபால் நிலையங்களில் தொடர் வாய்ப்பு கணக்கை 10 வயது பூர்த்தியடைந்தது முதல் தொடங்கலாம், குறைந்தபட்சம் ரூ.100ஐ கூட மாத மாதம் சேமிக்கலாம்.ஜூலை 2022ம் ஆண்டு முதல், அஞ்சலக தொடர் வைப்புத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கான கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. 

தற்போதைய 5.8 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 முதலீடு செய்தால், 10 ஆண்டுகளில் அந்தத் தொகையானது உங்களுக்கு ரூ.16 லட்சம் வருமானத்தை தரும். 10 வருடத்திற்கான உங்கள் மொத்த வைப்புத்தொகை 12 லட்சமாக இருக்கும், மேலும் மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூ.4.26 லட்சமாக இருக்கும். எனவே, நீங்கள் பெறும் மொத்த வருமானம் ரூ.16.26 லட்சமாக இருக்கும். கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது, இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்