Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Power Shutdown in Tamilnadu: மின் வெட்டு அரவே இருக்காது… அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடி அறிவிப்பு….!

Gowthami Subramani April 23, 2022 & 08:35 [IST]
Power Shutdown in Tamilnadu: மின் வெட்டு அரவே இருக்காது… அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடி அறிவிப்பு….!Representative Image.

Power Shutdown in Tamilnadu: தமிழகத்தில் இனி மின் வெட்டு அரவே இருக்காது என மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மின்தடை விளைவு

வட மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்கள் உள்ளிட்டு 12 மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மின் தடை என மிக அதிக நேரம் மின் தடை அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஜெனரேட்டர் போன்ற மாற்று வழிகளும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தி மூலம் பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டின் நிலை 

தற்போது வரை தமிழகத்தில் ஒருசில மணி நேரத்திற்குத் தான், மின் வெட்டு காணப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், ஏராளமான இடங்களில் பணியாளர்களுக்கு மிகுந்த தொந்தரவாக உள்ளது. இது மட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்குக் கட்டாயம் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்தன.

மின்தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை

இதனை அடுத்து, இன்று வெளியிட்ட அறிவிப்பில் இன்னும் இரண்டு நாள்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் மின்சார துறை அலுவலகத்தில் நடந்த ஆய்விற்குப் பின், மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய 216 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதும், நிலக்கரி தட்டுப்பாடுமே இந்த மின் தடைக்கு காரணம் எனக் கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரத்தைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கருத்து

இது குறித்து, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, “நிலக்கரி பற்றாக்குறை வரும். இதை சமாளிப்பதற்காகத் தான் 4 லட்சத்து 80 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்படுவதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசிடமிருந்து 796 மெகாவாட் மின்சாரம் வரவேண்டியவையாக உள்ளது. ஆனால், நமக்குத் தேவையானவற்றை நாமே பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மின் உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் அதானி நிறுவனம் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளி செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்