Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வயாகராவால் வாழ்க்கையை இழந்த வாலிபர்...இனி இப்படியே தான் இருக்கனும்..!

madhankumar June 09, 2022 & 13:14 [IST]
வயாகராவால் வாழ்க்கையை இழந்த வாலிபர்...இனி இப்படியே தான் இருக்கனும்..!Representative Image.

ஆண்மை குறைவின் காரணமாக வயாகரா மாத்திரையை எடுத்துக்கொண்ட வாலிபர் ஒருவர் இனி வாழ்நாள் முழுவது அதை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற பகுதியை சேர்ந்த 28 வயதான வாலிபர் ஒருவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து இவருக்கு ஆண்மைகுறைய்வு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போயுள்ளது, மேலும் மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போனதால் பெரும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது அவர்கள் வயாகரா மாத்திரையை பயன்படுத்துமாறு கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை கேட்ட வாலிபர் தினமும் 25 முதல் 35 மில்லி கிராம் வரை வயகரா மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அது பலனளிக்காமல் போகவே மீண்டும் நண்பர்களின் ஆலோசனைப்படி அளவை அதிகரித்து தினமும் 200 மில்லி கிராம் வயாகரா மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.

இது பலனளிப்பதாக தெரிந்தவுடன், தினமும் இதனை தொடர்ந்துள்ளார், மாத்திரையின் உதவியுடன் தினமும் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான உடலுறவில் மனைவியுடன் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்லவே, சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்த கணவர், மீண்டும் வயாகரா எடுத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டுள்ளர்.

இதனால் மீண்டும் கோபித்துக்கொண்டு சென்றுள்ளார் மனைவி, இதனிடையே வயாகரா தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது, தினமும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாக எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளது, அவரது ஆணுறுப்பில் மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது, இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய பின் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்கு ஒப்புக்கொண்ட அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்துள்ளது, ஆனால் அளவுக்கு அதிகமாக வயாகரா எடுத்துக்கொண்டதால் அது தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது, வலி குறைந்தாலும் விறைப்பு தன்மை குறையாமல் இருந்துள்ளது, அவர் வாழ்நாள் முழுவதும் இந்த விறைப்புத்தன்மையோடு தான் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மீண்டும் எதனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் விறைப்புத்தன்மை குறையாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இனி இந்த விறைப்புத்தன்மையை மறைக்க அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நினைத்தால் தான் மலைப்பாக உளது என பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்