Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜனாதிபதி தேர்தல்.. முதல் நாளில் லாலு பிரசாத் யாதவ் வேட்புமனுத் தாக்கல்!!

Sekar June 16, 2022 & 11:26 [IST]
ஜனாதிபதி தேர்தல்.. முதல் நாளில் லாலு பிரசாத் யாதவ் வேட்புமனுத் தாக்கல்!!Representative Image.

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளில் 11 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும்.

நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியான ஜனாதிபதி பதவியில் தற்போது இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதானால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத தாக்கல் தொடங்கியுள்ளது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்யாத நிலையில், பீகாரில் உள்ள சரண் பகுதியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் என்ற நபரும் மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவர் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இவர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அல்ல. 

வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் ஒருவர் தனது நாடாளுமன்றத் தொகுதிக்கான தற்போதைய வாக்காளர் பட்டியலில் தனது பெயரைக் காட்டும் பதிவின் சான்றளிக்கப்பட்ட நகலை இணைக்காததால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தேர்தலுக்கு ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் செய்யப்பட வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50 வாக்காளர்கள் முன்மொழிபவர்களாகவும், குறைந்தது 50 வாக்காளர்கள் இரண்டாம் நிலை ஆதரவாளர்களாகவும் இருக்க இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்