Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

குடியரசு தலைவர் மூன்று நாள் சுற்றுப்பயணம்: இன்று கர்நாடகா வந்தார்...!

Baskarans Updated:
குடியரசு தலைவர் மூன்று நாள் சுற்றுப்பயணம்: இன்று கர்நாடகா வந்தார்...!Representative Image.

டெல்லி: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மூன்று மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவிற்கு வரும் அவர், முட்டஹள்ளியில் உள்ள சத்யசாய் பல்கலை கழகத்தில் நடைபறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். 

இதைத்தொடர்ந்து மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, பழங்குடியின பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். இதை தொடர்ந்து நாளை தெலங்கானா செல்லும் ஐத்ராபாத்தில் நடைபெறும் அல்லூரி சீதராம ராஜாவின் 125வது பிறந்த நாள் கொண்டாட்ட நிறைவு நாளில் உரையாற்றுகிறார்.

மகாராஷ்டிரா செல்லும் அவர், கட்சிரோலியில் உள்ள கொண்ட்வானா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் 5ஆம் தேதி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து 7ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்