Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு....உரிமம் ரத்து...அதிகாரிகள் எச்சரிக்கை..!

madhankumar June 10, 2022 & 10:53 [IST]
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு....உரிமம் ரத்து...அதிகாரிகள் எச்சரிக்கை..!Representative Image.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைபாடுகளுடன் இயக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பள்ளிகள் திறக்கப்டுள்ளதையடுத்து அந்தந்த பள்ளிகளில் இயக்கப்படும் வாக்கங்கள் தரம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளது, ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. இதில் தனியார் பள்ளிள் மூலம் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் வாகனங்களில் அவசர கதவு உள்ளதா? பழுதாகியுள்ளதா? என்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வட்டாரபோக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனத்தை கொண்டுவருமாறு சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுரை கூறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்