Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!!

Sekar August 22, 2022 & 12:34 [IST]
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!!Representative Image.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ.10,696 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். 

முதல்வர் என்.ரங்கசாமி உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரூ.1,729 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாயும் மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் கடன் திரட்ட ரூ.1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வித்துறையுடன் இணைந்து இயங்கும் விளையாட்டு மற்றும் இலைஞர் நலன் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மாணவ மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடை மற்றும் மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ரூ.80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை உருவாக்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் உருவாக்கப்படும். மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் தொடங்கப்படும்.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அனைத்தும் அரசு கட்டிடத்திற்கு மாற்றப்படும்.

உர விற்பனையை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்

குறைதீர்ப்பு கூட்டங்களை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். 

இவ்வாறு முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்