Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இங்கிலாந்தின் மன்னராக இன்று பதவி ஏற்கிறார் சார்லஸ்!

Priyanka Hochumin September 10, 2022 & 12:10 [IST]
இங்கிலாந்தின் மன்னராக இன்று பதவி ஏற்கிறார் சார்லஸ்!Representative Image.

பிரிட்டன் இளவரசி இறப்புக்கு பின்னர் அதிகாரபூர்வ பிரிட்டன் மன்னராக சார்லஸை பிரகடனப்படுத்த உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. 'பிரகடனம்' என்றால் என்ன தெரியுமா? ஒரு நாட்டின் புது மன்னர் பதவி ஏற்பதற்கான பொது அறிவிப்பாகும். அந்த சமயத்தில் புது மன்னரை அங்கீகரிப்பதற்காக, முதன்மை பிரகடனம் நடைபெறும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை கொடிகள் முழு கம்பத்திற்கு பறக்கவிடப்படும். அதற்கு பின்னர் கொடிகளை அரைக்கம்பத்திற்கு கொண்டுவரப்பட்டு பறக்கவிடுவார்கள்.

இப்படியாக அந்தரங்க சபை பிரகடனம் முடிந்ததும், பொது பிரகடனம் வாசிக்கப்படும். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பால்கனியில் இருந்து இன்று காலை 11 மணி முதல் வாசிக்கப்படும். இந்த நிகழ்வு நடைபெறும் பொழுது ஏர்ல் மார்ஷல், மற்ற ஆயுத அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் ஆகியோருடன் கார்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் வாசிப்பார். இன்றைக்கான பிரகடனம் நடந்து முடிந்ததும், இரண்டாவது பிரகடனம் லண்டன் நகரில் ராயல் எக்ஸ்சேஞ்சில் முதல் பிரகடனத்தின் அதே நாளில் மதியம் வாசிக்கப்படும். இதே போல் செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் ஆகிய பகுதிகளில் பிரகடனங்கள் வாசிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்