Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!

Gowthami Subramani September 21, 2022 & 13:40 [IST]
ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image.

சமீபத்தில் ஐநா வெளியிட்ட தகவலில், உலகளவில் 4 நொடிகளுக்கு ஒரு முறை பசியால் மரணமடைகின்றனர் எனக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் மரணமடைந்தவர்கள் சென்று, தற்போது பசிப்பட்டினியால் மரணம் அடைவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, துபாய் அரசு யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக இலவசமாக ரொட்டி அளிக்கும் இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகளவில் 4 நொடிகளுக்கு ஒரு மரணம் என்ற வீதத்தைப் பார்க்கும் போதே, எத்தனை பேர் பசியால் வாடுகின்றனர் என்று தெரிகிறது. இதற்கு துபாய் அரசு அறிவித்த இந்த பசி தீர்க்கும் இயந்திரம் ஒரு முன்னுதாரண நடவடிக்கையாகவே தெரிகிறது.

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image

இந்தியாவில் இருந்து அதிகமானோர்

இது குறித்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது, துபாயில் வசிக்கும் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வந்து அங்கு தங்கி வேலை பார்ப்பவர்கள் தான். கட்டட வேலை, கார் துடைக்கும் வேலை என குறைவான ஊதியத்தில் அதிக பேர் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து இலட்சக்கணக்கானோர் இங்கு வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image

குறைவான ஊதியம்

குறைவான ஊதியத்தில், தனக்கு தேவையானதை கூட எடுத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு பணம் அனுப்பியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சில பேர் உள்ளனர். மூன்று வேளை சாப்பிடுவதைக் குறைத்து கொண்டு பணத்தை மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பட்டினியானவே நாட்களை கழிக்கின்றனர்.

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image

பிரமரின் அறிவிப்பு

இந்த நிலையை மாற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமராக விளங்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் அவர்கள் முன்னரே அறிவித்திருந்தார். இதனையடுத்து, தற்போது பசி தீர்க்கும் இயந்திரமாக துபாய் முழுவதும் சூடாக ரொட்டிகளை வழங்கக் கூடிய ‘வெண்டிங் மெஷின்களை’ நிறுவியுள்ளார்.

ஒரு பட்டனில் பசி பறந்து போகும்… இலவச உணவு தரும் வெண்டிங் மெஷின்…!Representative Image

ஒரு நிமிடத்தில் உணவு

அதன் படி, இந்த இலவசமாக உணவு வழங்கும் இந்த இயந்திரங்கள், கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இயந்திரத்தில், அரபி ரொட்டி மற்றும் ஃபிங்கர் ரோல் போன்ற இரண்டு உணவுகளும் சுட சுட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், மக்களுக்காக செயலாற்றும் இந்த உணவுத் திட்டத்தில் தனி நபர்களும் நன்கொடை வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்