Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20 பேர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்...சுகாதாரத்துறை செயலர் தகவல்..!

madhankumar May 15, 2022 & 11:06 [IST]
20 பேர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம்...சுகாதாரத்துறை செயலர் தகவல்..!Representative Image.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடும்ப நலத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் புற நோயாளிகள் பிரிவை தொடங்கிவைத்தார்.

பின்னர் புனரமைக்கப்பட்ட மருத்துவமனை வார்டுகளை பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊட்டி மலர் கண்காட்சியை காண்பதற்கான அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் தங்கள் சுய பாதுகாப்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் 20 பேருக்கு மேல் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கூறியுள்ளார். தாவரவியல் பூங்காவில் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என கூறினார்.

கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தாக்களில் காய்ச்சல் குறித்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, உடல்நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பித்தால் என்ன காய்ச்சல் என்பதை மருத்துவர் கூறிவிடுவார் என தெரிந்தார்.

குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு தமிழக முதல்-அமைச்சரிடம் கூறி ரூ.5 கோடி நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழங்குடியினருக்கு வரும் சிக்கிள் செல் அனீமியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மரபு வழி நோய்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உறவு முறையில் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும். மரபு வழி இல்லாதவர்களுக்கு பரிசோதனை மூலம் வராமல் தடுக்கலாம் என அவர் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்