Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை.. கம்யூனிஸ்ட் மாணவரணி வெறிச்செயல்!!

Sekar June 24, 2022 & 19:36 [IST]
ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை.. கம்யூனிஸ்ட் மாணவரணி வெறிச்செயல்!!Representative Image.

கேரளாவின் வயநாட்டில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எப்ஐ'இன் போராட்ட ஊர்வலம் வன்முறையாக மாறிய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 100 இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

"சுமார் 80-100 ஆர்வலர்கள் இருந்தனர். தற்போது, ​​அவர்களில் எட்டு பேர் காவலில் உள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்." என்று காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக கேரளாவின் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள காடுகளை சுற்றி பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட தவறிவிட்டார் என்று கூறி மாணவர் அமைப்புகளால் போராட்டம் நடத்தப்பட்டது. எம்.பி.யின் அலுவலகத்திற்குள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

காங்கிரஸ் எதிர்வினை

காங்கிரஸ் எம்பி சசி தரூர் ராகுல் காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்ட காட்சிகளை ட்வீட் செய்து, பினராய் விஜயன் & சீதாராம் யெச்சூரி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்களா அல்லது இதை அவர்கள் அனுமதிக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், இந்த தாக்குதல் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சதித்திட்டம் என்று குற்றம் சாட்டினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்