Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகள்..! பட்னா ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..!!

Saraswathi Updated:
பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்க்கட்சிகள்..! பட்னா ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு..!!Representative Image.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வழுவான கூட்டணியை உருவாக்கும் வகையில், பாட்னாவில் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், ராகுல் காந்தி பங்கேற்பார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  

வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமெடுத்துவருகிறது. இதற்கு பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையேற்று, நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுவருகிறா.  

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே டெல்லி சென்ற நிதிஷ்குமார்,  காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதேபோல், மம்தா பானர்ஜியையும் அவர் சந்தித்தார்.  

பாஜகவுக்கு எதிரான இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 23ம் தேதி நடக்கிறது.  இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்றும்,  பிரதிநிதிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் நிதிஷ்குமார் வலியுறுத்தியிருந்தார்.  

அந்த வகையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ராகுல்காந்தியுடன் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார்.  

இதனிடையே, 23ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்சா), டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.  பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு நடத்தவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்