Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rain Update : தமிழகத்தில் குளு குளு.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Muthu Kumar May 22, 2022 & 09:33 [IST]
Rain Update : தமிழகத்தில் குளு குளு.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!Representative Image.

Rain Update : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாளை முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரியில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய்யம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழக கடலோர பகுதிகளில் பலத்தகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுருத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்