Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளுத்து வாங்கிய கனமழை… இன்னும் வருமாம்… எந்தெந்த இடத்துல தெரியுமா..?

Gowthami Subramani November 04, 2022 & 16:30 [IST]
வெளுத்து வாங்கிய கனமழை… இன்னும் வருமாம்… எந்தெந்த இடத்துல தெரியுமா..?Representative Image.

வட கிழக்குப் பருவமழை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிகத் தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம், மாலையில் பெய்த கனமழையால், ஆயிரம் ஏக்கர் வரையிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

அதே போல, சீர்காழியில் 22 செ.மீ அளவிலான மழை பதிவாகி, நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த கனமழையால், மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆங்காங்கே பெய்து வரும் கனமழையால், நகரின் ஓரிரு இடங்களில் நெரிசல், விபத்துகள் பல்வேறு இடங்களில் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு வீட்டின் முன்பகுதி இடிபாடுகளால் சிக்கியதுடன், வீட்டின் கதவைக் கூட திறக்க முடியாத நிலை உண்டானது.

மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரத்தில் ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், பாலத்தை கடக்க முயன்ற வெள்ளம் அடித்துச் சென்றதுடன், அதை மீட்கும் பணியும் நடைபெற்றது.

மேலும், கன்னியாக்குமரி மாவட்டத்தில் பெய்த அதிவேக கனமழையால் 5 வீடுகள் இடிந்துள்ளது.

இவ்வாறு, தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 6 வரை அதிவேக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், ஒரு சில இடங்களில் விபத்து, இடிபாடுகள் என ஆபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

யாருக்கு யார் ஜோடி..? காபி வித் காதல்...... திரை விமர்சனம்!

Representative Image.

அஜித் 63ல் மீண்டும் இணைகிறது அதிரடி காம்போ!

Representative Image.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்