Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித் 63ல் மீண்டும் இணைகிறது அதிரடி காம்போ!

UDHAYA KUMAR November 04, 2022 & 18:11 [IST]
அஜித் 63ல் மீண்டும் இணைகிறது அதிரடி காம்போ! Representative Image.

பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் இணைந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. அஜித்தும்  விஷ்ணு வர்தனும் அஜித் 63 படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் படத்தினை இயக்கப்போவது யார் எனும் கேள்வி வருசா வருசம் வந்துகொண்டே இருக்கும். ஒரு படம் முடித்த பிறகு அடுத்து யாருடன் இணைவார் என்கிற எதிர்பார்ப்பு பரபரப்பாக தொற்றிக் கொள்ளும். சிறுத்தை சிவாவுடன் வீரம் படத்தில் இணைந்த அஜித், அடுத்தடுத்து நான்கு படங்களில் தொடர்ந்து அவருடைய இயக்கத்திலேயே நடித்தார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்த பிறகு வேறு இயக்குநருடன் ஜோடி சேர்ந்தார். 

ஹெச் வினோத்துடன் நேர் கொண்ட பார்வை, வலிமை இப்போது துணிவு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அஜித், அடுத்து விக்னேஷ் சிவனுடன் ஜோடி சேர இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின. 

விக்னேஷ் சிவனுடனான படத்தை முடித்த பிறகு அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்