Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான்... இன்றும் மழை பெய்யும்...

Muthu Kumar July 16, 2022 & 17:30 [IST]
வெள்ளத்தில் தத்தளிக்கும் ராஜஸ்தான்... இன்றும் மழை பெய்யும்...Representative Image.

ராஜஸ்தானின் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, கடந்த 24மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக ஸ்ரீகங்காநகரில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மீட்பு பணியில், தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்