Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

9ஆம் வகுப்பு மாணவியின் திருமணத்தை தடுத்த ஆட்சியர்...பெற்றர்களுக்கு அறிவுரை..!

madhankumar May 26, 2022 & 15:14 [IST]
9ஆம் வகுப்பு மாணவியின் திருமணத்தை தடுத்த ஆட்சியர்...பெற்றர்களுக்கு அறிவுரை..!Representative Image.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் குழந்தை திருமணத்தை தடுத்த மாவட்ட ஆட்சியர் சிறுமியை படிக்க வைக்குமாறு பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்கினார்.

கணேஷ் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரகாஷ் (22) என்பவரது வீட்டில் அவரது உறவினரான 14 வயது சிறுமி 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் இருவருக்கும் இன்று அதிகாலை திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை குழந்தைத் திருமண தடுப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பிரகாஷ் வீட்டுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இருவர் வீட்டாரையும் சந்தித்து பேசினார்.
 
அப்போது பிள்ளைகள் படிக்க அரசு பல சலுகைகள் வழங்கியுள்ளதாகவும் படிக்கும் வயதில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து இருவரையும் படிக்க வைக்க அறிவுறுத்திய அவர், இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து பேசிய அவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 குழந்தைத் திருமணங்களை ராணிப்பேட்டையில் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்