Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுறவின்போது.. ஆணுறையை அகற்றுவது கிரிமினல் குற்றம்.. உச்ச நீதிமன்றம் பரபர தீர்ப்பு!!

Sekar July 31, 2022 & 10:41 [IST]
உடலுறவின்போது.. ஆணுறையை அகற்றுவது கிரிமினல் குற்றம்.. உச்ச நீதிமன்றம் பரபர தீர்ப்பு!!Representative Image.

உடலுறவின்போது துணையின் அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது குற்றம் என்று கனடாவின் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் ஆன்லைனில் தொடர்பு கொண்ட இரண்டு பேர் தங்கள் நட்பை வளர்த்துள்ளனர். பின்னர் அவர்கள் காதல்வயப்பட்டு மனதும் மனதும் இணைந்ததை போல் உடலளவிலும் இணைந்திருக்கின்றனர். உடல் ரீதியாக இணையும்போது கட்டாயம் ஆணுறை அணிய வேண்டும் என அந்த பெண் தனது துணையிடம் கூறியுள்ளார்.

துணையும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில், இருவரும் இரண்டு முறை உடலுறவு கொண்டனராம். அதில் ஒருமுறை ஆணுறை பயன்படுத்திய நிலையில், இரண்டாவது முறை ஆணுறையை பயன்படுத்தவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பந்தப்பட்ட நபர் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனினும் பெண்ணின் ஒப்புதலுடன் தான் உடலுறவு நடந்தது என்பதால், பெண்ணின் குற்றச்சாட்டை நிராகரித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இதற்கு எதிராக பிரிட்டிஷ் கொலம்பியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ரத்து செய்தது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் கனடாவின் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடலுறவின்போது பெண்ணின் சம்மதமில்லாமல் ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றம் என்றும் இது பாலியல் வன்கொடுமைக்கு குறைவில்லாத குற்றம் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்திலும் நீதிமன்றங்களால் உடலுறவின் போது ஆணுறைகளை அகற்றிய குற்றங்களுக்காக பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்