Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் - காவல் அதிகாரி உட்பட 4 பேர் பலி

Saraswathi Updated:
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம் - காவல் அதிகாரி உட்பட 4 பேர் பலிRepresentative Image.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி இனத்தவரிடையே புதிதாக நடைபெற்ற மோதல் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

மணிப்பூரி மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்துவந்தனர். இதற்கு குக்கி பழங்குடியினத்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் உருவாகி கலவரமாக வெடித்தது. மூன்று மாதமாக நீடித்துவரும் வன்முறை சம்பவங்களால், இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கலவரத்தை ஒடுக்கும் வகையில், மணிப்பூர் மாநில போலீசாருடன், மத்திய அரசு துணை ராணுவப்படைகளையும் அங்கு அனுப்பி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இருப்பினும், மாநிலத்தில் ஆங்காங்கே திடீர் திடீரென வன்முறை வெடித்த வண்ணமே இருந்துவருகிறது. அந்த வகையில், பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் கிராமவாசிகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. வீடுகளுக்கு தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதையடுத்து, அந்த கும்பலைத் தடுக்க அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது. 

அப்போது, வீடுகளில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அப்போது பதிலுக்கு மற்றொரு கும்பலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால், பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் பதற்ற நிலை நீடித்துவருகிறது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்