Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகளுக்கு உதவி தொகை...லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? எப்படி சரிபார்ப்பது..!

madhankumar June 23, 2022 & 09:01 [IST]
மாணவிகளுக்கு உதவி தொகை...லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? எப்படி சரிபார்ப்பது..!Representative Image.

2.70 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000  வழங்கும் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. திமுக அரசனது ஏற்கனவே பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது. 

அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து மேல் படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. 

அதுமட்டுமின்றி மாணவிகள் வேறு எந்த உதவி தொகை பெற்றிருந்தாலும், இந்த உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்