Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உக்ரைன் மீது ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்.. மே 9 வெற்றி நாள் யாருக்கு? | Russia Ukraine Bakhmut

Nandhinipriya Ganeshan Updated:
உக்ரைன் மீது ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்.. மே 9 வெற்றி நாள் யாருக்கு? | Russia Ukraine Bakhmut Representative Image.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டது. இந்த போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையிலும், போர் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து இரு நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய ராணுவம் வீசிய குண்டு மழையில் உக்ரைன் நாடு உருக்குலைந்து போயுள்ளன.

மேலும், உக்ரைன் நாட்டிலுள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் வாழும் இடங்களை தேடி தேடி ரஷ்ய வீரர்கள் அழித்தனர். இதனால், பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து அகதிகளாக உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க, மேற்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

அதுமட்டுமல்லாமல், பல உலக நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உக்ரைனுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மாதம் கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் தெரிவித்தது. ஆனால், உக்ரைன் அரசு அது மறுப்பு தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து பக்முத் நாட்டின் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. வாக்னர், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருங்கிய தொழிலதிபர் யெவ்ஜெனி பிரிகோஜின் என்பவர் தொடங்கிய கூலிப்படை அமைப்பு. 

ரஷ்ய அதிபருக்கு உதவியாக இருந்தது உள்ளிட்ட காரணத்திற்காக யெவ்ஜெனி பிரிகோஜின் மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை அறிவித்தன. இந்த நிலையில், சமீபத்தில் பக்முத் நகரில் இருந்து வெளியேறுவதாக வாக்னர் அமைப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையில், மே 7 ஆம் தேதி அந்த திட்டத்தை தள்ளிப்போட உள்ளதாக வாக்னர் அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார். 

மேலும் தங்களுக்கு மாஸ்கோ அதிக ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்ததால் உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெற்றி நாளான மே 9 ஆம் தேதி பக்முத்தை முழுவதும் கைப்பற்றும் என்று அவர் தெரிவித்தார். ஆனால், பக்முட்டில் உள்ள உக்ரேனிய தரைப்படைகளின் தளபதி கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, மே 9 ஆம் தேதி பக்முத் நகரை ரஷ்யா ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதற்காக முழுவீச்சில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்