Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள்...வீடியோ வைரல்..!

madhankumar May 19, 2022 & 15:04 [IST]
பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவர்கள்...வீடியோ வைரல்..!Representative Image.

ஆவடியில் பள்ளி மாணவன் ஒருவனை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆவடி காமராஜ் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோராசேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபிஅரசன் என்ற மாணவன்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த அப்பள்ளிக்கு தேர்வெழுத கோணாம்பேடு அரசு பள்ளி மாணவர்கள் 15 பேர் வந்திருந்தனர். அப்போது கோணாம்பேடு பள்ளி மாணவிகளை காமராஜ் அரசு பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அந்த மாணவிகள் தங்களது வகுப்பு மாணவர்களிடம் இந்த செய்தியை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் நேற்று மாலை ஆங்கில தேர்வு எழுதிவிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிபி அரசன் என்ற மாணவனை இந்த மாணவர்கள் மற்றும் உள்ளுறை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த நபர்களையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிபிஅரசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முதலுதவி  சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சம்பவம்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சிபி அரசனிடம் விசாரித்தபோது தாம் யாரையும் கேலி செய்யவில்லை எனவும் மாணவர்கள் குழுவாக செல்லும் போது யாரோ ஒருவர் செய்ததற்கு நம்மை தவறாக தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்