Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயில்ல போடுங்க சார் அந்த ஆட்டை.. நீதிபதி விசித்தர தீர்ப்பு.. என்னனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!!

Sekar May 25, 2022 & 17:46 [IST]
ஜெயில்ல போடுங்க சார் அந்த ஆட்டை.. நீதிபதி விசித்தர தீர்ப்பு.. என்னனு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!!Representative Image.

தென் சூடான் நாட்டில் உள்ள ஒரு ஆட்டிற்கு 3 வருட கடுங்காவல் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கோர்ட் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும். அது போன்ற விசித்திரமான வழக்கு தான் இது.

நடந்தது என்ன?

தென்சூடான் நாட்டில் ஒரு ஆட்டுக் கிடாய் 45 வயதான ஆதியூ சாப்பிங் என்பவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைடன்ஹா சாப்பிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ஆட்டுக் கிடாய் போலீஸ் காவலில் வைக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஆட்டுக்கிடாயின் உரிமையாளர் நிரபராதி என்றும் கிடாய் தான் குற்றத்தைச் செய்தது என்பதை உறுதி செய்த நீதிபதி ஆட்டுக்கிடாய்க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளார்.

இதையடுத்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆட்டுக்கிடாய் தென்சூடானின் லேக்ஸ் மாநிலத்தில் உள்ள அடுவெல் கவுண்டி தலைமையகத்தில் உள்ள இராணுவ முகாமில் அடுத்த மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.

உள்ளூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும், ஆட்டுக்கிடாயின் உரிமையாளர் டுயோனி மன்யாங் தால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஐந்து பசுக்களைக் கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆட்டுக்கிடாயின் உரிமையாளரும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் கிடாய் மூன்று ஆண்டு சிறைவாசத்தை முடித்து வெளிவரும்போது, ​​உள்ளூர் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அந்த ஆடு வழங்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்