Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு....ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி.!

madhankumar July 08, 2022 & 09:13 [IST]
ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு....ரத்தவெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி.!Representative Image.

ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்சோ அபே கடந்த 2012 முதல் 2020 வரை பணியாற்றினார். இந்நிலையில் இவர் மீது துப்பாக்கிசூடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் நார என்ற நகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ பங்கேற்றார், சாலை பகுதியில் நடந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் ஷின்சோ பேசிக்கொண்டிருக்கையில் அவர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த நபர் ஒருவர் திடீரென எழுந்து அபேவின் மார்பின் மீது துப்பாக்கியால் சுட்டார், இதனால் ரத்தவெள்ளத்தில் துடுதுடித்து அவர் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் அவரை மீது அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் துப்பாக்கிசூடு நடத்திய நபர் யார் எனவும் எதற்காக சுட்டார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்