Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று இலங்கை புறப்படும் நிவாரண பொருட்கள் கப்பல்-முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைப்பு.!

madhankumar May 18, 2022 & 06:40 [IST]
இன்று இலங்கை புறப்படும் நிவாரண பொருட்கள் கப்பல்-முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைப்பு.!Representative Image.

பொருளாதார நெருக்கடியால் பல பிரச்சனைகளை சந்தித்துவரும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக ‘டான் பின்-99’ என்ற கப்பல் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கடந்த 2 நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், நிவாரண பொருட்கள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

கப்பலில் ஏற்றப்பட்டுள்ள பொருட்களின் விபரம்:

இந்த கப்பலில் முதல் கட்டமா க ரூ.8 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகளில் கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர்கள் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டு உள்ளது.

அதேபோல் 50 கிலோ எடையுள்ள அரிசி பைகள் 5 ஆயிரம் டன் அளவுக்கு ஏற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி நடந்து வருகிறது. கப்பலில் இருக்கும் இடத்தை பொறுத்து நிவாரணப்பொருட்கள் ஏற்றப்படுகிறது.

கப்பலில் நிவாரணப்பொருட்கள் ஏற்றும் பணி இன்று பகல் நிறைவடைந்ததும், மாலை 5 மணிக்கு சென்னை துறை முகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறை முகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் இதில் அமைச்சர்கள், எம்.பி., எல்.ஏ.க்கள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

சென்னை துறை முகத்தில் கப்பல் தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறை பணிகளை நிறைவு செய்துவிட்டு, சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல், அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்