Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பதவி வரும் போகும்.. தத்துவம் பேசும் ஆளும் கட்சி எம்பி.. அப்போ மாநில அரசு கவிழ்வது உறுதி?

Sekar June 22, 2022 & 12:23 [IST]
பதவி வரும் போகும்.. தத்துவம் பேசும் ஆளும் கட்சி எம்பி.. அப்போ மாநில அரசு கவிழ்வது உறுதி?Representative Image.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான எம்.வி.ஏ அரசாங்கம் எந்நேரமும் கவிழலாம் எனும் நிலையில், சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ள கருத்து ஆட்சி கவிழப்போவது உறுதி என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனாவின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டேவை நண்பர் மற்றும் கட்சியின் பழைய உறுப்பினர் என்று அழைத்த ராவத், "நாங்கள் பல தசாப்தங்களாக ஒன்றாக வேலை செய்துள்ளோம். அவருக்கும் நாமும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பது எளிதல்ல. இன்று காலை அவருடன் ஒரு மணி நேரம் உரையாடினேன். இதுபற்றி கட்சித் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, அனைவரும் சிவசேனாவில் இருப்பார்கள். எங்கள் கட்சி ஒரு போராளி, நாங்கள் தொடர்ந்து போராடுவோம், அதிகபட்சம் நாங்கள் ஆட்சியை இழக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று கூறினார்.

ஷிண்டேவின் கோரிக்கை குறித்து கேட்டபோது, ​​"ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்து எந்த கோரிக்கையும் இல்லை, அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை" என்று பதிலளித்தார்.

"அதிகபட்சம், என்ன நடக்கும்? அதிகாரம் போகும், மீண்டும் அதிகாரம் வரும், ஆனால் நற்பெயர் தான் முக்கியம்." என்று மேலும் கூறினார்.

மகாராஷ்டிராவில் என்சிபி மற்றும் காங்கிரஸுடனான கூட்டணி தொடர்பாக உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. ஷிண்டேவின் கூற்றுப்படி, அவர் சுமார் 40 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே இன்று சிவசேனாவின் மற்றொரு மூத்த தலைவரான குலாப்ராவ் பாட்டிலும் திடீரென கட்சியினரின் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுள்ளது சிவசேனாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் பலர் இன்று மும்பையில் நடக்கும் அவசர கூட்டத்தில் பங்கு பெறாமல் கல்தா கொடுத்துள்ளனர்.

மறுபுறம் மாநில கவர்னர் கோஷ்யாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக ஆட்சியமைக்க முயற்சியா?

கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தைப் போல் இங்கும் பாஜக ஆட்சியமைக்க முயற்சி செய்யும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

சிவசேனாவின் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தற்போது ஷிண்டே ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில், சட்டசபையில் கட்சியை உடைத்து, பாஜக ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்குமா அல்லது, கிளர்ச்சி எம்எல்ஏக்களை தனது கட்சியில் இணைத்து மத்திய பிரதேசத்தைப் போல் ஆட்சியமைக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்