Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து உயிரிழக்கும் பாடகர்கள்....அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

madhankumar [IST]
அடுத்தடுத்து உயிரிழக்கும் பாடகர்கள்....அதிர்ச்சியில் ரசிகர்கள்..!Representative Image.

மேடையில் பாடிக் கொண்டிருந்த போதே உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கிருஷ்ணகுமார் குன்னத் உயிரிழந்தது பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது ரசிகர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது பிரபல  பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்களும், திரையுலகமும் மீளவில்லை.

இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் டெல்லியை சேர்ந்த 22 வயது பாடகரும், பாடலாசிரியருமான ஷீல் சாகர் நேரிட்டு காலமானார். அவரது மரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவரது இசையில் வெளியான முதல் பாடலான ‘நான் முயன்றால்’ பாடல் பலரது பாரட்டுகளை பெற்றது.

 'பிஃபோர் இட் கோஸ்', 'ஸ்டில்' மற்றும் 'மிஸ்டர் மொபைல் மேன் - லைவ்' ஆகியவை அடங்கும். குருகிராமில் உள்ள தி பியானோ மேன் ஜாஸ் கிளப்பில் அவரது நிகழ்ச்சியின் போது ‘மிஸ்டர் மொபைல் மேன்’ பாடல் நேரடியாக பதிவு செய்யப்பட்டது. ஷீல் சாகர் தனது பாடும் திறமைக்காக பல விருதுகளை வென்றுள்ளார்.

இவரது பாடல்கள் ஸ்பாட்டிஃபை இயங்குதளத்தில்  மட்டும் 40 ஆயிரம் ஸ்ட்ரீம்களைக் குவித்துள்ளது.இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் பல்வேறு விதமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்