Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உயிருக்கு உத்தரவாதமில்லை.. தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச?

Sekar July 09, 2022 & 14:34 [IST]
உயிருக்கு உத்தரவாதமில்லை.. தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச?Representative Image.

இலங்கையின் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, இன்று தலைநகர் கொழும்புவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை எதிர்ப்பாளர்கள் சுற்றி வளைத்ததையடுத்து அங்கிருந்து பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக இலங்கையில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது போராட்டம் உச்சகட்டமடைந்து, ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் கசிந்தது. இதையடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும், உயிருக்கு உத்தரவாதம் கருதி, அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சேவை குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், மூன்று மாதங்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவரது அண்ணனும் நாட்டின் பிரதமராக இருந்தவருமான மஹிந்த ராஜபக்ச பதவி விலகி ரகசிய இடத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து பாராளுமனறத்தில் வெறும் ஒரு எம்பியை மட்டுமே வைத்துள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டின் பிரதமரானார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் தெரிவித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சிக்கலானதாக உள்ளதால் நிதி கிடைக்காமல் இலங்கை தத்தளித்து வருகிறது.

அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதாக ஏப்ரல் மாதம் இலங்கை அறிவித்தது. அதன் மொத்த வெளிநாட்டுக் கடன் $51 பில்லியன் ஆகும். அதில் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் $28 பில்லியன் திருப்பிச் செலுத்த வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்