Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image.

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றோம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றும் கூட. பொதுவாக, நமக்கு ஒருநாள் மட்டும் தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?. ஆம். கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது மட்டுமல்ல, கிறித்துவ சமயத்தின் தியாகிகள் மற்றும் புனிதர்களுக்கு மரியாதை அளிக்க, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, என்று பலரின் பங்களிப்புகளையும் நினைவு படுத்தும் பண்டிகையாக இருக்கிறது. 

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

கிறிஸ்துமஸ் நாளில் கிறித்தவர்கள் அனைவரும் தேவாலயம் சென்று இயேசு கிறிஸ்துவை வழிபாடு செய்து ஒருவருக்கொருவர்கள் வாழ்த்தினை கூறி மகிழ்வார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் வழங்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக கொண்டாடுவார்கள். மேலும், வீட்டை அழங்கரிப்பதும், விருந்தினர்களை வரவேற்பது என நாளே சிறப்பாக இருக்கும். மதம் என்பதை தாண்டி கிறிஸ்துமஸ் தற்போது ஒரு பொதுவான பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது என்று சொன்னால் அதுமிகையாகாது. இந்த அற்புதமான நாளில் உங்க நண்பர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் அன்பையும், மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களோடு பகிர்ந்து கொண்டாடுவோம் வாருங்கள்!

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

அன்பை மட்டுமே விதைத்து சென்ற, இயேசுபிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம், அன்பால் உலகை ஆள்வோம். அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

இந்த நல்ல நாளில், உலக நாடுகள் ஒற்றுமையுடனும், உலக மக்கள் அன்புடனும், நோய் நொடி இல்லா வாழ்க்கை வாழ பிராத்தனை செய்வோம், ஹேப்பி கிறிஸ்துமஸ்!

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

எல்லோரும் எல்லாமும் பெற்று.. வளமுடனும், நலமுடனும் வாழ இறைவனை வணங்குவோம். அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

அன்பெனும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட ஆயுளையே கொடுத்தார். அவர் பிறந்த நாளன்று பகைமையை அறுத்தெறிந்து, பாசமாக வாழ்ந்திடுவோம்!  ஹாப்பி கிறிஸ்துமஸ்!

அன்பு நெஞ்சங்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்! | Christmas Wishes in Tamil Representative Image

உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று நான் சாண்டா கிளாஸிடம் சொல்ல முடிந்தால், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியையும் அமைதியையும் பரிசாக கேட்பேன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்