Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குதிரையில் எற சாதி முக்கியம்.....தொடரும் சாதி வன்முறைகள்..!

madhankumar May 29, 2022 & 15:31 [IST]
குதிரையில் எற சாதி முக்கியம்.....தொடரும் சாதி வன்முறைகள்..!Representative Image.

குஜராத்தில் ஓபிசி சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு நடந்த திருமண ஊர்வலத்தில் அவர் குதிரையில் அழைத்துவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கும்பல் கூட்டத்தில் கல் வீதி தாக்கியதில் போலீசார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து பனஸ்கந்தாவின் தீசாவில் உள்ள கும்பட் கிராமத்தில் இருந்து 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது, மாப்பிள்ளை குதிரை சவாரி செய்வதை அந்த கல் வீசிய கும்பல் எதிர்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறியபோது, 

கோலி தாக்கூர் சமூகத்தை சேர்ந்த சௌஹான், ஊர்வலத்தின் போது குதிரை சவாரி ஏற்றிச் செல்வதை எதிர்த்து, தனது கிராமத்தைச் சேர்ந்த தர்பார் (சத்ரிய) சமூகத்தினர் அச்சுறுத்தியதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கோரினார். நிலைமையைக் கட்டுப்படுத்த மூன்று காவல் நிலையங்களில் இருந்து போலீஸாரும், DSP அலுவலகம் தீசாவின் கூடுதல் படையும் வரவழைக்கப்பட்டன. கிராமத்தின் சமூகத் தலைவர்களுடனும் நாங்கள் கலந்துரையாடினோம், ”என்று தீசா கிராமப்புற காவல் நிலையத்தின் பிஐ எம்.ஜே. சௌத்ரி கூறினார்.

காவலர்கள் கூடாது பாதுகாப்பிற்காக நிற்கும்போதே 100 முதல் 200 பேர் வரை இணைந்து கல் வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பத்தில் பல போலீசார் ரத்தம் வருமளவிற்கு தாக்கப்பட்டுள்ளார், மேலும் காவல் வாகனங்கள் ஆகியவற்றை உடைத்துள்ளனர். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, கலுசின் சோலங்கி உட்பட மொத்தம் எழுபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று எம்.ஜே. சவுத்ரி கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்