Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு கட்டாய நைட் ஷிஃப்ட் வைக்க கூடாது...உபி முதல்வர் அதிரடி..!

madhankumar May 29, 2022 & 11:55 [IST]
பெண்களுக்கு கட்டாய நைட் ஷிஃப்ட் வைக்க கூடாது...உபி முதல்வர் அதிரடி..!Representative Image.

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக புதிய நடைமுறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச  தொழிலாளர் துறை வெளியிட்ட உத்தரவில், பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதற்கு அனுமதி கிடையாது. . விருப்பத்தின் பேரில் வேலை செய்யலாமே தவிர அவர்களை பணிசெய்யும் நிறுவனம் கட்டாயப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல இந்த உத்தரவை காரணம் காட்டில் நைட் ஷிஃப்ட் வைத்திருக்கும் நிறுவனங்கள் பெண்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது என கூறியுள்ளது. மேலும் விருப்பத்தின்பேரில் நைட் ஷிஃப்ட் செய்யும் பெண்களுக்கு இலவச போக்குவரத்துக்கு சேவை, உணவு, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களின் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை புல்டோசர் வைத்து இடித்து தள்ளும் அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டது. இது போன்ற அதிரடி செயல்களுக்கு எதிர்ப்பு குரல் வந்தாலும், சட்டம் ஒழுங்கு கறாராக கடைப்பிடிக்க வேண்டும் என மறுபுறம் ஆதரவு குரலும் எழுந்து வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்