Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : திடீர் விசிட் அடித்த சைலேந்திரபாபு..? கஞ்சா வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை..!

Muthu Kumar May 24, 2022 & 15:30 [IST]
Tamilnadu News Live : திடீர் விசிட் அடித்த சைலேந்திரபாபு..? கஞ்சா வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை..!Representative Image.

Tamilnadu News Live : ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் சொத்து முடக்கப்படும் என எச்சரித்தார்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். இந்நிலையில், அங்கு ஆய்வு செய்த அவர், குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட  72 லட்சம் பணம், 218 பவுன் நகை, 100 செல்போன் ஆகியவற்றை சோதனை செய்தார். மேலும், குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. லாக்கப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

மேலும், இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் அனைத்து காவலர்களும் என்னை நேரடியாக சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்