Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க லெஸ்பியன் தான..? சக மாணவிகள், பேராசியர்கள் கிண்டல் செய்ததால் தற்கொலை முயற்சி..!

madhankumar August 04, 2022 & 15:27 [IST]
நீங்க லெஸ்பியன் தான..? சக மாணவிகள், பேராசியர்கள் கிண்டல் செய்ததால் தற்கொலை முயற்சி..!Representative Image.

லெஸ்பியன் என கூறி இரண்டு கல்லூரி மாணவிகளை சக மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கிண்டல் செய்ததால் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதியில்  மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த 19 வயது இளம் பெண் மற்றும் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகிய இருவரும் மருத்துவமனை விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த இரண்டு மாணவிகளும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இரண்டு மாணவிகளும் வெளியே சென்றுவிட்டு தாமதமாக வந்துள்ளனர். மேலும் எப்போது இணைபிரியாமல் ஒன்றாகவே இருந்துவந்துள்ளனர்.

இந்த மாணவிகளை சில சக மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சிலர் லெஸ்பியன்ஸ் என கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் இரண்டு மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்த மெர்க்குரி சல்பைடு என்ற வேதிப்பொருளை மாணவிகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

ஒரு மாணவி உணவு உண்ணும்போது அதனை அருந்தியுள்ளார், அப்போது மற்றொரு மாணவி அதனை வாங்கி அருந்தியுள்ளார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சிகிச்சையின் பலனாக ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்