Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிலைமை இதுதான்....வரும் நாட்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு..?

madhankumar June 17, 2022 & 18:22 [IST]
நிலைமை இதுதான்....வரும் நாட்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு..? Representative Image.

இந்தியாவில் சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு கடம் தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 26ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில், இது எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக தனியார் விற்பனை நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும் உள்ளூர் விற்பனையை நிராகரித்துவிட்டு, வருமானதை தரும் ஏற்றுமதி வியாபாரத்தை செய்ய முயற்சி செய்துவருகின்றனர். உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கும், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் சில இடங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் இயக்கப்படும் பம்புகளில் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல ரிலையன்ஸ் நயாரா போன்ற தனியார் நிறுவனங்களின் பம்புகளிலும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4900 பம்புகள் உள்ள நிலையில், அவற்றில் குறைந்தது 1000 பம்புகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் எரிபொருள் நிரப்ப மக்கள் திரள்வதால் பாதுகாப்பிற்கு போலீசாரை அழைக்கும் நிகழ்வுகளும் தொடர்கிறது. கடந்த ஒரு வாரமாகவே பல டீலர்களால் எரிபொருளைப் பெற முடியவில்லை. வரும் நாட்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே அஞ்சப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்